என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சார் பதிவாளர்"
- தமிழ் ஆட்சி மொழியின் செயலாக்கத்தை கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
- அரசு அலுவலகங்களிலுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழில் கையொப்பம் இட வேண்டும்.
பல்லடம்:
பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் ( பொ ) புவனேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
தமிழ்நாட்டில் தமிழ் மொழியினை வளர்க்க வேண்டுமென பொதுமக்கள், மாணவர்கள் இடையே பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகள்,பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் அரசு அலுவலக நடைமுறைகளில் தமிழ் ஆட்சி மொழியின் செயலாக்கத்தை கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இதன்படி, அனைத்து அரசு அலுவலகங்களிலுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழில் கையொப்பம் இட வேண்டும்.
மேலும் கோப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியமாக்கல் போன்றவற்றை தமிழில் கையாள்வது குறித்து ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ்மொழியில் கோப்புகளை கையாள வேண்டும் என அறிவுறுத்தத்தப்பட்டு உள்ளது.
மேலும் வணிக நிறுவனங்களில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். அவ்வாறு வைக்காத நிறுவனங்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
தமிழக பதிவுத்துறை தலைவர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், தற்போது ஒரு ஆவணத்தை பதிவு செய்வதற்காக இணையதளத்தில் பொதுமக்கள் விவரங்களை உள்ளீடு செய்கின்றனர். அப்போது ஆவணப் பதிவு செய்வதற்காக சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் நேரத்தையும், தேதியையும் பார்வையிட இணையத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த தேதி, நேரத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பொதுமக்களுக்கான டோக்கன்கள் இணையதளம் வழியாக வழங்கப்படுகிறது. ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் 100 டோக்கன்கள் 6 முறை ஒதுக்கீடு செய்து வழங்கப்படுகிறது. பொதுவாக நல்ல நாட்களில் டோக்கன்கள் முன்கூட்டியே பதிவு செய்யப்படுகிறது.
ஒரு நாளைக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையிலான டோக்கன்கள் முன்பதிவு செய்யப்படுவதால் பொது மக்கள் சிலர் ஏமாற்றமடைகின்றனர்.
பொதுமக்கள் தங்கள் விருப்பப்படி பதிவு செய்யும் வகையில் எந்த நாட்களிலும் டோக்கன்களை பெற ஏதுவாக தட்கல் முறையில் ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.
இந்த திட்டத்தின்படி தட்கல் டோக்கன்கள் நேர இடைவெளியின் முடிவில் செயல்படுத்தப்படும். தட்கல் டோக்கன்களும் தற்போதைய செயல்முறையை போலவே நடைமுறைப்படுத்தப்படும். இந்த முறைப்படி தற்போதைய டோக்கன்களுடன் தட்கல் டோக்கன்களாக எந்த நாளிலும் கூடுதலாக டோக்கன்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
பதிவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பொதுமக்கள் இல்லை என்றால் மற்றும் முன்பதிவு செய்யும் நாளில் மறுதிட்டமிடப்பட்ட நேரம், டோக்கன் செல்லாது மற்றும் கட்டணம் திரும்பப் பெறப்படாது. வழக்கமான நேர ஒதுக்கீட்டின்படி தட்கல் இடங்களும் முன்பதிவு செய்யக் கிடைக்கும் தட்கல் நேர ஒதுக்கீட்டின்படி முன்பதிவு 2 மாதங்களுக்கு முன்பே திறக்கப்படும்.
வழக்கமான டோக்கன்களுடன் தட்கல் டோக்கன்களை அறிமுகப்படுத்த அனுமதி வழங்குமாறு பதிவுத்துறை தலைவர் அரசிடம் கோரியுள்ளார். தட்கல் டோக்கன்களைத் தேர்வு செய்யும் பதிவுதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தட்கல் கட்டணத்தை வரவு வைப்பதற்கு ஒரு தனி கணக்கு தலைப்பைக் குறிப்பிடவும் அவர் கோரியுள்ளார்.
பதிவுத்துறை தலைவர் முன்மொழிவை கவனமாக ஆய்வு செய்த பிறகு குறிப்பிடப்பட்டுள்ள முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஆவணம் மற்றும் பிற பதிவுகளுக்கு தட்கல் டோக்கன்களை அறிமுகப்படுத்த அரசு இதன் மூலம் அனுமதி அளிக்கிறது. தட்கல் டோக்கன் முறை 100 தேர்ந்தெடுக்கப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்படும். இது முதல் நிகழ்வில் அதிக அளவு பதிவுகளை பதிவு செய்யும் பதிவுத்துறை தலைவர் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் தட்கல் டோக்கன் முறை செயல்படுத்தப்பட வேண்டிய ஆவண பதிவுகளின் அடிப்படையில் அடையாளம் காண வேண்டும்.
- வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்
- பாம்பு சுமார் 8 அடி நீளம் கொண்டதாக இருந்தது
கன்னியாகுமரி :
கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலகம் எதிரில் உள்ள புதரில் கொடிய விஷம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு பதுங்கி இருப்பதை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்து உள்ளனர். உடனே இது பற்றி கொட்டாரம் பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சிலர் செல்வன் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் வேட்டை தடுப்பு காவலர் சிவா தலைமையில் வனத்துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் புதருக்குள் பதுங்கி இருந்த கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர்.
அந்த பாம்பு சுமார் 8 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் வனத்து றையினர் அந்த பாம்பை பாதுகாப்பான காட்டுப்ப குதியில் கொண்டு விட்டனர்.
- இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் புரோக்கர்கள் பலரும் சிக்கினார்கள்
- ஜன்னல் கண்ணாடியின் பின்னால் ரூ.500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
கன்னியாகுமரி :
இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் புரோக்கர்கள் பலரும் சிக்கினார்கள். அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த வருவதை பார்த்த புரோக்கர்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் கையில் இருந்த பணத்தை பதுக்கி வைத்தனர். அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடியின் பின்னால் ரூ.500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் அந்த இடத்திற்கு சென்று அந்த பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
- பத்திரப்பதிவில் மோசடி செய்த சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மதுரை வடக்கு சார் பதிவாளர் உடந்தையாக செயல்பட்டு வருகிறார்.
மதுரை
மதுரை சின்ன சொக்கி குளம் பகுதியை சேர்ந்தவர் பால நமச்சிவாயன். ரஜினி மன்ற பிரமுகரான இவர் மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது-
நான் மதுரை பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். மதுரை இலந்தைகுளம் கிராமம் வளர் நகர் பகுதியில் எனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள 37 சென்ட் இடத்தை கள்ளிக்குடியை சேர்ந்த சரவணன், அவரது மனைவி கலைவாணி, சீனிவாசன், ஜெகன் குமார், கார்த்திக் ஆகியோர் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு போலீஸ்நிலையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சட்டவிரோதமாக மீண்டும் பத்திரப்பதிவு செய்து நீதிமன்றத்தை அவ மதிப்பதுடன், சட்டத்திற்கு புறம்பாக மேற்படி நபர்கள் போலி ஆவணங்களை வைத்து பல்வேறு நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்து என்னை மோசடி செய்து வருகின்றனர்.
இதற்கு மதுரை வடக்கு சார் பதிவாளர் உடந்தையாக செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது துறை ரீதியாக நடவ டிக்கை எடுப்பதுடன் மோசடியாக செய்யப்பட்ட பத்திரப்பதிவையும் உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்